×

2023-24 நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.5,488 கோடி நிகர லாபம் ஈட்டியதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு

டெல்லி: 2023-24 நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.5,488 கோடி நிகர லாபம் ஈட்டியதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 2023 ஜன.-மார்ச் காலாண்டில் ரூ.10,841 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 49% சரிந்து ரூ.5,488 கோடியாக உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் ஐ.ஓ.சி.யின் மொத்த வருமானம் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, லாப ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.7 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

The post 2023-24 நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.5,488 கோடி நிகர லாபம் ஈட்டியதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Oil Corporation ,Delhi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி...